இது குழந்தைகளுக்கு மட்டும்: அறிமுகம் செய்யும் பேஸ்புக்

குழந்தைகளுக்கான மெசன்ஜர் கிட்ஸ் எனும் புதிய செயலி அறிமுகமாகியுள்ளது. குழந்தைகள் பயன்படுத்துவதற்கென பிரத்யேக செயலியை பேஸ்புக் வெளியிடுகிறது.

குறுந்தகவல் அனுப்பும் வசதி கொண்ட புதிய செயலி குழந்தைகள் தங்களது பெற்றோர் மற்றும் அவர்கள் அங்கீகரித்த நண்பர்களுடன் குறுந்தகவல் அனுப்பி சாட் செய்ய முடியும்.

பேஸ்புக் விதிகளின்படி சேவையை பயன்படுத்த முடியாத 13-வயதிற்கும் குறைவான குழந்தைகள் புதிய செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும்.

பெற்றோர் கட்டுப்படுத்தக் கூடிய அம்சங்கள் நிறைந்த மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் குழந்தைகளால் தங்களது நண்பர்களை சேர்க்கவோ, குறுந்தகவல்களை அழிக்கவோ முடியாது.

குழந்தைகள் விரும்பும் நண்பர்களை செயலியில் அனுமதிப்பது, குறுந்தகவல்களை அழிப்பது போன்றவற்றை பெற்றோர் மட்டுமே செய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் முதற்கட்டமாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மெசன்ஜர் கிட்ஸ் செயலி ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மாதங்களில் மெசன்ஜர் கிட்ஸ் செயலி அமேசான் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.