இது பொலிஸ் குடும்பம்: மிரட்டும் நாச்சியார் (வீடியோ)

ஜோதிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் டீசரில் ஜோதிகா பொலிஸ் வேடத்தில் மிரட்டுகிறார்.

பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த டீசரில் ஜோதிகா பொலிஸ் அதிகாரியாக தோன்றி இருக்கிறார். மேலும் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார்.

டீசரின் இறுதியில் ஜோதிகா ஒரு இளைஞனை அறைந்துவிட்டு கோபத்துடன் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்.

தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.