இந்திய அணியில் விளையாடிய தமிழக வீரருக்கு நடந்த திருமணம் (படங்கள்)

இந்திய அணியின் தொடக்க வீரராக இருந்த அபினவ் முகுந்துக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த அபினவ் முகுந்த் தமிழக அணிக்கு இடைவிடாது பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.

சென்னையில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்திய வீரரான சென்னை வாழ் தினேஷ் கார்த்திக் அபினவ் முகுந்தின் நீண்டகால நண்பர்.

அவர் அபினவ் திருமண விழாவில் கலந்துகொண்ட நிலையில் அதன் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.