இந்திய வேகப்பந்து வீச்சு குறித்து கபில்தேவ் கருத்து!

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய வேகப்பந்து வீச்சு சிறப்பாக செயல்படுகிறது என இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்;

கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய அணியும் தற்போதுள்ள வேகப்பந்து குழு போல் செயல்பட வில்லை.

தற்போது அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. இதை நம்ப முடிய வில்லை. இதுபோன்ற செயல்பாட்டையும் தீவிரமான ஆட்டத்தையும் பார்த்ததில்லை.

இது கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்கு கிடைத்ததாகும்.

கோலியின் ஆக்ரோ‌ஷம் நல்ல பயன்களை தருகிறது என்று கூறினார்.