இந்த விஸ்கி போத்தல் இத்தனை கோடியா?

பிரிட்டனில் பழமையான விஸ்கி போத்தல் ஒன்று இலங்கை மதிப்பில் 19 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளது.

பிரிட்டனின் எடின்பர்க் நகரைச் சேர்ந்தவர் Macallan Valerio. இவர் தன்னிடம் உள்ள விஸ்கி பாட்டில் ஒன்றை ஏலம் விடுவதாக அறிவித்தார்.

1926 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த விஸ்கி போத்தல் சில தினங்களுக்கு முன்பு ஏலத்திற்கு வந்தது.

இந்த விஸ்கி பாட்டில் 8 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

அதாவது அதன் இந்திய மதிப்பு 19,22,23,739 ஆகும். இதே காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு விஸ்கி போத்தல் 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விழுந்து உடைந்தமை குறிப்பிடத்தக்கது.