இந்த Button அழுத்தினால் சாப்பாடு ரெடி! எங்கு எப்படி தெரியுமா?

இந்திய உணவை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரம் சிங்கபூரில் முதன்முறையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பிரியாணி, பரோட்டா போன்ற சுவையான இந்திய உணவு பொருட்களை, தானியக்க இயந்திரங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்க சிங்கப்பூர் சகுந்தலாஸ் உணவகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதனை விளைவாக இந்திய உணவு பொருட்களை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரத்தினை, கடந்த ஒரு மாத காலமாக சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வர்த்தகப் பள்ளியில் சிங்கப்பூர் சகுந்தலாஸ் உணவகம் அமைந்துள்ளது.

சிங்கப்பூரில், இந்திய உணவுகளை மட்டும் விநியோகம் செய்யும் முதல் தானியக்க இயந்திரம் என்னும் பெருமையினை தற்போது குறித்த தானியக்க உணவு விநியோக இயந்திரம் பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த தானியக்கி இயந்திரத்தில் வைக்கப்படும் உணவு பொருட்கள், சென்டர்லைஸ்ட் கிச்சன் எனப்படும் ஒருங்கிணைந்த சமையலறையில்

தினமும் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை 4 மணி நேரத்திற்கு ஒருமுறை தயாரிக்கப்பட்டு வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.