இனி வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் அனுப்ப முடியாதா..?

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோர்கள் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது.

பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்-இல் அதிகளவிலான போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வசதி ஜூலை முதல் அறிவிக்கப்பட்டது.

ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு, அதன்பின் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது.