இன்று முழு சந்திர கிரகணம்: விபரம் இதோ!

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு தொடங்குகிறது.

103 நிமிடங்கள் தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாலை 2.43 மணிக்கு முடிக்கிறது. அப்போது நிலா, ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி தரும்.

முன்னதாக இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணமாக தொடங்குகிறது.

இந்த 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத் தகுந்த அம்சம்.

மேலும், புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது.

அடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25 ஆம் திகதி நிகழும். அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும்.

இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு ஏற்படாது.