இப்படி செருப்பு வீசலாமா..? கேள்வியோடு வீரர் (படம்)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கோரி ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று (10) எதிர்ப்பை மீறி ஐ.பி.எல் போட்டி நடத்ததப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சென்னை அணியினர் மீது காலணி வீசப்பட்டது. 8 வது ஓவரின் முதல் பந்து வீசியபோது செருப்பு வீசியுள்ளனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.

சென்னை வீரர்களை சந்தித்துவிட்டு டு பிளசிஸ் பெவிலியன் திரும்பும் போது இந்த காலணி வீச்சு இடம்பெற்றுள்ளது.

அப்போது அதனை கையிலெடுத்த அவர் ரசிகர்களைப் பார்த்து பேசாமால் நின்றார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதேவேளை மைதானத்துக்குள் காலணி வீசிய 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.