இப்பவே கண்ணக் கட்டுதே…. அம்பானி மகளின் திருமண செலவு!

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், வரும் டிசம்பர் 8, 9 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.

உதய்பூர் விமான நிலையத்தில் மொத்தம் 200 விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. இவை அனைத்தும் ‘சார்ட்டட் பிளைட்ஸ்’ எனப்படும் சிறப்பு பயன் விமானங்கள் ஆகும்.

வீட்டு விசேஷம் நடைபெறவுள்ள டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் மட்டும் தலா 30-50 விமானங்கள் லேண்ட், டேக் ஆஃப் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதய்பூரில் உள்ள அனைத்து 5 நட்சத்திர விடுதிகளையும், அம்பானி குடும்பத்தினர் ஏற்கனவே புக் செய்து விட்டதாக கூறப்படும் நிலையில், விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விருந்தினர்களை அழைத்து வர கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதற்காக சுமார் 1,000 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதய்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், இஷா அம்பானி-ஆனந்த் பிரமோல் ஆகியோர் நேராக மும்பை வருகின்றனர்.

அங்கு டிசம்பர் 12ம் திகதி அவர்களின் திருமணம் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இத்தாலியில் நடைபெற்ற நிச்சயதார்த்தம், உதய்பூர் மற்றும் மும்பையில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான மொத்த செலவு ஆயிரம் கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது.