இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்தி கேட்டு மைதானத்தை விட்டு ஓடிய கால்பந்து வீரர்! வீடியோ

கால்பந்து போட்டி ஒன்றில் நியூபோர்ட் கவுண்டி வீரர் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான செய்தி கேட்டதும், அனுமதி கேட்டு மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

FA Cup கால்பந்து போட்டிகள் சவுத் வேல்ஸில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் நியூபோர்ட் கவுண்டி மற்றும் மிடில்ஸ்பிராக் அணிகள் மோதின. இதில் நியூபோர்ட் கவுண்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் போது நியூபோர்ட் அணியின் கோல்கீப்பர் ஜோ டேவின் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

ஆனால், ஜோ டே அவரது செல்போனை அணைத்து வைத்திருந்ததால் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடயம் அவருக்கு தெரியாது.

இந்நிலையில், போட்டி முடிந்ததும் அவர் தந்தையான விடயத்தை அணியின் உரிமையாளர் ஜோ டேவிடம் கூறினார்.

அதனைக் கேட்டு உற்சாகமடைந்த ஜோ டே, அவரிடம் அனுமதி கேட்டுவிட்டு வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நியூபோர்ட் கவுண்டி அணியினர் போட்டி முடிந்ததும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் ஜோ டே அதனை தவிர்த்து விட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை காண வேகமாக ஓடியது மைதானத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.