இராசவள்ளிக் கிழங்கு கூழ் செய்வது எப்படி..??

உலகில் நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தமிழரின் சுவையான அறுசுவை உணவை யாழ்ப்பாண மண்ணுக்கு சென்று உண்டால் அதில் தனி சுவை உண்டு.

அந்த வகையில் இன்று யாழ்ப்பாணத்து இராசவள்ளிக் கிழங்கு கூழ் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இராசவள்ளிக் கிழங்கு – 1 சிறிது
தேங்காய்ப் பால் – 1 கப் (முதற்பால்)
சீனி – 3 மே.கரண்டி
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

* கிழங்கை தோல் சீவி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கழுவவும்.
* 3 1/2 கப் தண்ணீரில் கிழங்கை போட்டு நன்றாக அவிய விடுவும்.
* தண்ணீர் பாதியாக வற்றியதும், பாலை விடவும்.
* பால் கொதித்ததும், சீனியையும்,உப்பையும் போடவும்.
* ஓரளவு இறுகியவுடன் இறக்கி மசிக்கவும்.
*சூட்டுடன் பரிமாறவும்.

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் இராசவள்ளிக் கிழங்கு கூழ் குறிப்பாக மாரி காலத்தில் சுடச் சுடக் குடித்தால் ..ம்ம்ம்