இராணுவ வீரர் என கூறி கொடிகாமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

கொடிகாமத்தில் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர் என கூறி வர்த்தக நிலையங்களில் நிதி சேகரித்த நபர் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டு கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் 12.01.2019 இன்று காலை முதல் நிதியினை சேகரித்துள்ளார்.

தமது இராணுவ முகாமில் சித்திரை வருடப்பிறப்பு தினத்தில் நிகழ்வு ஒன்று நடை பெறவுள்ளதாகவும் அதற்காக நிதி சேகரிப்பாதாகவும் கூறி சிங்கள மொழியிலான கடிதம் ஒன்றை காண்பித்தே நிதியை சேகரித்து வந்துள்ளார்.

இவரிடம் சுமார் 10000/- வரை பணம் இருந்ததை காணமுடிந்தது. கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொள்கின்றனர்..

யாழருவி நிரூபர் – முகமாலை எழில்