இறவாமல் வாழ்வாய்..!!

சோதனைகளைக் களையெடுத்து
பயிராய் நின்று
பாதுகாத்தாய் நீ..!!

வெறுப்புடன் பேசி
வெட்டி செல்ல
நான் நினைத்தாலும்
உன்னையே
ஒட்டிப் போகிறது
என் பேச்சு…!

உள்ளத்து உணர்வாய்
இதயத்தில்
இணைந்த நீ
இறவாமல் வாழ்வாய்
என் இதயத்தில்…!!

-யாழ்ரதி-
இந்தியா