இறைச்சியை ஆடையாக அணிந்து போட்டியில் கலந்துகொண்ட பெண்கள்!!

இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து பிரேசிலில் நடந்த “மிஸ் பம் பம் பிரேஸில்” எனும் அழகு ராணி போட்டியில் சில பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் முகமாக சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவுசெய்தவற்காக இந்த போட்டி நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.

பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் இறைச்சியினலான ஆடை அணிந்ததாக கூறப்படுகிறது.

போட்டியில் சுமார் 50 கிலோ எடையுள்ள இறைச்சியை தமது நீச்சலுடைகைளுக்கு மேலாக போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் ஆடை போல் அணிந்திருந்தனர்.

பெண்கள் வெறும் இறைச்சித் துண்டு அல்ல என உணர்த்துவதே தமது நோக்கம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவின் பிரபல பாடகிகளில் ஒருவரான லே டி காகா 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை விருது வழங்கல் விழா ஒன்றில் இறைச்சியிலான ஆடையை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.