இலங்கைக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து! வெளியாகிய எச்சரிக்கை கடிதம்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் இலங்கையினுள் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கான அவதானம் உள்ளதாக விமானப்படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படையின் உயர் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நேற்றைய தினம் அனுப்பப்பட்ட கடிதத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில், கிறிஸ்தவர்கள் மற்றும் கத்தோலிக்கர்களை இலக்கு வைத்தும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் இதன் கீழ் இடம்பெற கூடும் என விமான புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் மேற்கொள்ள கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என இதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கான உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு விமானப்படையின் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ISIS என்பது IS அமைப்பினது ஒரு பிரிவாகும் என்பகு குறிப்பிடத்தக்கது.