இலங்கையின் ஒரு பகுதியில் நில நடுக்கம்!

மலையகத்தின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.15 – 8.20 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி இயக்குனர் உதய குமார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பதுளை, ஹாலிஎல, பசறை, வெலிமடை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் சிறு அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாக நிலையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் எதுவும் ஆபத்து நிலை இருந்தால் மக்களுக்கு அறிவிக்கப்படும் என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சில நொடிகளே இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிய சத்தத்துடன் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அதிர்வை உணர முடிந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.