இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய தடை!

இலங்கையிலுள்ள வீதி பெயர்ப்பலகைகளில் வேறு மொழி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள வீதி பெயர்ப்பலகைகளை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மாத்திரம் காட்சிப்படுத்த பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அண்மைய காலங்களில் சீன மொழியில் சில வீதிகளுக்கு பெயர் இடப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.