இலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா? வெளியானது புகைப்படம்

நீர்கொழும்பு, கட்டுபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சிங்கள ஊடகமொன்று குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் இவரா? என குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுது.

குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் கட்டுப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிகுண்டு வெடிக்க வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த நபரிடம் உள்ள பையில் அவர் இதனை கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த வெடிகுண்டு தாக்குதல் மனித வெடி குண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.