இலங்கையில் கோர விபத்து! பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்

மொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒரு முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, மற்றைய முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே படுகாயமடைந்த நிலையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.