இலங்கையில் தயாரிக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டுகள்! தொழிற்சாலை முற்றுகை

தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலை கொழும்புக்குட்பட்ட வெல்லம்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய நிலையில் தொழிற்சாலையில் முகாமையாளர் உட்பட 9 பேரை கைதுசெய்துள்ளனர்.

இது வெள்ளிரும்பு தயாரிக்கும் தொழிற்சாலையென அடையாளப்படுத்தப்பட்டு அங்கு குண்டு தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளன.

அத்தொழிற்சாலையில், தற்கொலைத் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரிப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஹோட்டல் ஒன்றில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட இன்ஷாப் அஹமட்டின், வர்த்தகரான தந்தையின் சொந்த தொழிற்சாலையென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த தொழிற்சாலையின் முகாமையாளராக பாகிஸ்தான் பிரஜையொருவர் கடமையாற்றி வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.