இலங்கையில் திடீர் காலநிலை மாற்றம்!

இலங்கையில் பல பகுதிகளில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யுமென தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு இவ்வாறு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.