இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எதிர்வுகூறியுள்ளது.

வெப்பமான வானிலை தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிகளவில் நீர் அருந்துமாறும் சிறுவர்கள், முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினத்தில் நாட்டின் அதிக வெப்பநிலையாக 34.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இரவு வேளையில் கொழும்பு மற்றும் இரத்மலானை பகுதிகளில் சாதாரண வெப்பநிலையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டுள்ளது.

அதனைத் தவிர, மட்டக்களப்பு, குருநாகல், நுவரெலியா மாவட்டங்களில் 2 பாகை செல்சியஸினால் வெப்பநிலை அதிகரித்திருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.