இலங்கையில் பெற்றோரை பார்க்க சென்ற அவுஸ்திரேலியா பிரஜைகள் பரிதாபமாக பலி!

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியா பிரஜைகளான இரண்டு சிங்களவர்கள் நேற்று பலியாகியுள்ளனர்.

Manik Suriaaratchi மற்றும் 10 வயதான அவரது மகள் Alexendria ஆகியோர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய St. Sebastian தேவாலயத்தில் நேற்று காலை நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியர்களான இவர்கள் தமது பெற்றோரை பார்க்க இலங்கை சென்றுள்ளனர்.

நேற்று ஈஸ்டர் ஞாயிறு வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற போது Manik Suriaaratchiயின் கணவர் Mawjood வாகனத்தை நிறுத்த சென்றிருந்ததால் அவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இலங்கையில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison கடுமையாக கண்டித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக அவர் அவர் இறங்கலை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரக்கத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.