இலங்கையில் மாட்டிக் கொண்ட 14 சீன பிரஜைகள்!!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை நேற்று (வியாழக்கிழமை) காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெ முன் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 14 பேரும் அண்மையில் தடல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்கள் கட்டட நிர்மாண பணிக்கான உதவியாளர்களாக பணியாற்றி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.