இலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் முகமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இரவு வேளைகளில் அமுல் படுத்தப்பட்டு காலைவேளைகளில் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் 321 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பலர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.