இலங்கையில் மீண்டும் முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள்!

இலங்கையில் மூன்றாவது முறையாக சமூக ஊடகங்கள் மீளவும் தடை செய்யப்பட்டுள்ளன.

வைபர், வட்ஸ்அப், யூரியூப் மற்றும் முகநூல் ஆகியவை இன்று காலை 6.30 மணியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தாக்குதல்களையடுத்து இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு இடைக்காலத் தடை ஏற்படுத்தப்படிருந்தது.

அந்தத் தடையை ஜனாதிபதி கடந்த 30ஆம் திகதி நீக்கியிருந்தார்.

அதனையடுத்து கடந்த வாரம் நீர்கொழும்பில் ஏற்பட்ட மோதலையடுத்து மீளவும் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சுமார் 12 மணிநேரத்தில் தடை நீக்கப்பட்டது.

தற்போது குளியாப்பிட்டிய உட்பட சில பகுதிகளில் ஏற்பட்ட மோதலையடுத்து சமூகவலைத்தளங்கள் மீளவும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a