இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைக்கான காரணம் வெளியானது!

வெசக் உற்சவத்தை முற்றாக குழப்பும் நோக்கிலேயே வடமேல் மாகாணம் மற்றும் மினுவங்கொட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.

புலனாய்வு பிரிவு அரசாங்கத்துக்கு இந்த விடயத்தை அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் பலர் இருப்பதாகவும் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை, புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.