இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு! சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து.

ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

நேற்று காலை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தாயும் தந்தையும் இரையாகியுள்ளனர்.

இவர்களின் 3 பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில், சுவிஸ் பேர்ண் பகுதியில் வசித்த தம்பதிகளான விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Bern Bumpliz Kiosk நாதன் மற்றும் அவரது மனைவியான கெளரி என அழைக்கப்படும் கேதாரகெளரி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.