இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புகள்! இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் மூவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், துருக்கியர்கள் இருவர், பிரித்தானியர்கள் மூவர், பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.