இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்

சூப்பர் 12 சுற்றில் நேரடியாகப் பங்குபெறும் தகுதியை இலங்கையும், வங்கதேச அணியும் இழந்துவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ள ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி விதிமுறைப்படி, டி20 தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாகப் போட்டியில் பங்கேற்க முடியும்.

அந்த வகையில், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்கின்றன.

கடைசி 9 மற்றும் 10வது இடங்களில் இலங்கை, வங்கதேசம் அணிகள் உள்ளதால், அந்தணிகள் நேரடியாக பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து இலங்கை அணியின் தலைவர் மலிங்கா தெரிவித்துள்ளமையானது;

இந்த முடிவு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எங்களால் சூப்பர் 12 பிரிவில் நேரடியாகத் தகுதி பெறமுடியாவிட்டாலும் கூட உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவோம் எனக் கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் இந்த ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.