இலங்கை இராணுவத்தினர் நெருங்க முடியாத தொழில்நுட்பத்தை பயன்படுத்திய குண்டுதாரிகள்!

இலங்கை உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் தகவல்களை பரிமாறிக் கொண்ட முறை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

சுவிட்சர்லாந்திலிருந்து செயற்படுத்தப்படும் ‘த்ரிமார்’ எனப்படும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் மூலமே தற்கொலைதாரிகள் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர் இந்த விடயத்தை கண்டறிந்துள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளும் இந்த ‘த்ரிமார்’ தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ‘த்ரிமார்’ தொழில்நுட்பத்தினூடாக பரிமாற்றப்படும் தகவல்களை கண்டறிவதற்கான சாத்தியம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இல்லை என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.