இலங்கை காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுடன் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாளைய தினமும் இந்த நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பதுளை – உல்ஹிட்டிய பகுதியில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அங்கு 43.02 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.