இலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுமா.?

அரச ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தனியார் துறை தனது ஊழியர்களுக்கு இந்த விடுமுறையை வழங்குவதற்கு பெருமளவில் உடன்படும் என்று அமைச்சர் ரவீந்திர சமரவீர நம்பிக்கை வெளியிட்டார்.