இலங்கை தற்கொலை தாக்குதல்! நியூசிலாந்து பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சரச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளும் வகையில், இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில், தமது நாட்டு புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேற்று நாடாளுமனறில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நியூஸிலாந்து பிரதமர் குறித்த விடயத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.