இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை காரணமாக, மின்சாரத்தை பயன்படுத்தும்போது அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மழைவீழ்ச்சி குறைவடைந்து, வரட்சியான காலநிலை நிலவுகிறது.

தற்போதைய நிலையில், மின்சாரத்தை வீண் விரயம் செய்வதைத் தவிர்த்து, மிக அவதானத்துடன் பயன்படுத்த வேண்டும்.

இதனூடாக தற்போது ஏற்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு தமக்கு உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.