இலங்கை மக்களுக்கு ஆரம்பமாகும் அடுத்த தலையிடி!

பால்மாவுக்கான விலைச் சூத்திரத்தின் படி இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாயாலும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 60 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் புதிய விலை 920 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.