இலங்கை மக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மணித்தியாலங்களில் இவ்வாறு மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய மழையுடன் 70 – 80 கிலோ மீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , தொலைப்பேசிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்று திறந்த வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.