இலங்கை மதுபானசாலைகளுக்கு பூட்டு!

இலங்கையில் 4 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கையெடுத்துள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் நாடு பூராகவும் அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.