இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்!!

அம்பாறை மாவட்டம் திருக்கோயில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

35வயதான பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த திங்கட் கிழமை (11.12.2017) அன்று, நண்பகல் 12.00 மணியளவில் புவனேஸ்வரன் ரிஷ்வினி எனும் குறித்த இளம் பெண், திருக்கோயில் வைத்தியசாலைக்கு செல்வதாகச் சென்றுள்ளார்.

ஆனாலும் இவர் இதுவரையும் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், வீட்டில் இருந்து வைத்தியசாலைக்குச் சென்றபோது சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார் என்று உறவினர்களால் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் தம்மால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்