இளைஞனைத் தாக்கிய கங்காரு: வெளியான அதிர்ச்சி வீடியோ

பாராசூட் மூலம் தரையிறங்கியவரை கங்காரு தாக்கி காயப்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

அவுஸ்திரேலியாவில் கான்பெரா அருகே உள்ள வனப்பகுதியில், பாரா கிளைடிங் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த இறங்கு தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த கங்காரு ஒன்று வேகமாக வந்து குறித்த இளைஞனை தாக்கியுள்ளது.

முன்பக்க கால்களால் தாக்கியதில் இளைஞரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.