இளைஞர்கள்- மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை!

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29) புத்தளம், தில்லையடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்பையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து, 660 கார்ட்டில் அடைக்கப்பட்ட 6600 ரெமடோல் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து எடுத்துச் சென்று, இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஆட்டோ சாரதிகள் உள்ளிட்டோரை இலக்கு வைத்து குறித்த போதை மாத்திரைகளை சந்தேக நபர் விற்பனை செய்து வந்துள்ளார் எனத் தெரிகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.