ஈரான் நிலநடுக்கம்: கண்கலங்க வைக்கும் சிறுவனின் மனித நேயம் (வீடியோ)

ஈரான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் தன் தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட் கிழமை 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.

இந்த பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பல தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், ஈரான் நாட்டின் கெர்மன்ஷா மாகாணத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தோழியை அழைத்துக் கொண்டு உணவு வாங்கிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறுவன் அங்கு உணவு கொடுத்துக் கொண்டிருப்பவர்களிடம் தனது தோழியை கையைப் பிடித்து அழைத்து சென்று, ‘நீங்கள் இவளுக்கு உணவு கொடுக்கவில்லை’ என்று கூறி உணவு வாங்கிக் கொடுக்கிறான்.

சிறுவனின் மனிதநேயத்தை அனைவரும் பாராட்டி வருவதோடு மனிதநேயம் மரிக்கவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.