உதட்டில் அந்த எழுத்தை பச்சை குத்திய பெண்ணுக்கு அடித்த லக்!!

பெண் ஒருவர் KFC என்று உதட்டில் பச்சை குத்தியதால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிக்கன் இலவசமாக கிடைக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த Tabatha Andrade (வயது 20) என்ற பெண்ணுக்கு சிக்கன் என்றால் பிடிக்குமாம். அதிலும் KFC சிக்கன் என்றால் அதிகம் விரும்பி சாப்பிடுவாராம்.

இதனால் அவர் தன்னுடைய உதட்டி KFC என்று பச்சை குத்தியுள்ளார்.

இதை அறிந்த KFC அந்த பெண்ணிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,

என் வீட்டு நாய்க்குக் கூட நக்கட்ஸ் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு சிக்கன் பிடிக்கும். முதல் முறையாக பச்சை குத்தியதைக் காட்டிய போது அது போலியான ஸ்டிக்கர் என்றே வீட்டில் நினைத்தார்கள்

பின் அவர்களுக்கு உண்மை தெரிந்ததும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு வலியும் அதிகம் ஏற்படவில்லை.

KFC சிக்கன் இனி வாழ்நாள் முழுவதும் இலவசமாக கிடைக்கப்போகிறது என்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.