உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு இந்த ஒரு டம்ளர் ஜூஸ் தீர்வு தரும்!!

பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை தருகின்றது எனக் கூறப்படுகிறது.

பீட்ரூட்டுடன் எலுமிச்சை, இஞ்சி, க்ரீன் ஆப்பிள் மற்றும் கேரட்டை சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் இரத்த அழுத்தம் குறைவதோடு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாக கூறப்படுகிறது.

இந்த ஜூஸை தயாரிப்பது எப்படி?

தேவையானவை

பீட்ரூட் – 2
க்ரீன் ஆப்பிள் – 1
கேரட் – 1
எலுமிச்சை – 1/2
துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மேலே கொடுக்கப்பட்ட பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை சற்றும் தாமதிக்காமல் தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இந்த ஜூஸை எப்போது வேண்டுமானாலும் தயாரித்துக் குடிக்கலாம்.

இந்த ஜூஸைக் குடித்தால், உடனடியாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

அதே சமயம் இந்த ஜூஸை குடிக்க ஆரம்பிக்கும் போது சில நாட்கள் தலைவலி அல்லது குமட்டலை உணரக்கூடும்.

இதற்கு இந்த ஜூஸ் முதலில் உடலை சுத்தம் செய்வது தான் காரணம்.

நாளடைவில் அந்தப் பிரச்சனை நீங்கி, உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.