உயிருக்குயிராக நேசித்த விதவை காதலிக்கு காதலன் செய்த கொடூரம்!

காதலியை கொலை செய்து, அவரின் சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, தமிழகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சேலத்தை சேர்ந்த ரவி என்பவர் கல் மாவு மில் நடத்தி வருகிறார். இவர், தனது மில்லில் கூலி வேலை பார்த்து வந்த பாப்பாத்தி என்ற விதவைப் பெண்ணை உயிராக காதலித்து வந்துள்ளார்.

தினமும் இரவு பாப்பாத்தியும், ரவியும் கல் மாவு மில்லில் உள்ள அலுவலக அறையில் தனிமையை சந்தித்து வந்துள்ளனர்.

இதை அறிந்த மற்ற கூலி தொழிலாளர்கள் பாப்பாத்தியை கண்டித்து உள்ளனர் . ரவி, தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, தனது 4 குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் உதவியதால் அவருடனான தொடர்பை பாப்பாத்தி மேலும் வலுவாக கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கல்மாவு மில் மூடிக் கிடந்ததால், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

நேற்று மில்லின் உட்பகுதியிலிருந்து, துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மாவு மில்லை திறந்துள்ளனர். இதன் போது பாப்பாத்தி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது அருகில் ரவி குடிபோதையில் மயங்கி கிடந்துள்ளார்.

பாப்பாத்தியின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அவரது உடலை பரிசோதித்தனர்.

இதில் அவரின் தலை சுவற்றில் மோதியதால் மண்டை உடைந்து உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

பின்னர் ரவி அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று பாப்பாத்தியும், ரவியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது பாப்பாத்தியின் நடத்தை சம்பந்தமாக எழுந்த சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில், அவரைப் பிடித்து ரவி சுவற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

ஆனால் பாப்பாத்தி குடிபோதையில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து ரவி அப்படியே விட்டுவிட்டார்.

சம்பவத்தன்று காலையில், பாப்பாத்தி மீது குடம் குடமாக தண்ணீரைக் கொட்டி போதையைத் தெளிய வைக்க முயன்றுள்ளார்.

பாப்பாத்தி அசைவின்றி கிடந்ததால், அவர் இறந்தது ரவிக்கு தெரியவந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ரவி அந்த அறையிலேயே படுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர், தான் துர்நாற்றம் வீசியதால் அவர் சிக்கி கொண்டார். ரவியை கைது செய்த பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

இறுதியில் பாப்பாத்தியின் 4 குழந்தைகளும் அனாதையாகியுள்ளமையே சோகமான சம்பவமாகும்.