உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிவந்த யுவதி! அவுஸ்திரேலிய அரசு எடுத்த முடிவு?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிவந்து தாய்லாந்தில் தற்போது தஞ்சமடைந்துள்ள சவுதி யுவதிக்கு தீர்வு ஒன்று கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியா அரசியல் தஞ்சமளிக்கக்கூடும் என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Rahaf Mohammed al Qunun உண்மையாகவே அகதி என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அகதி என உறுதியாகிய பின்னர் அவரால் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு அடைக்கலமளிப்பது குறித்து மிகச்சாதகமாக அவுஸ்திரேலியா பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

Rahaf Mohammed al Qunun நாட்டைவிட்டுப்புறப்படுவதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கான சுற்றுலா விசாவைப்பெற்றிருந்தார் என்று கூறப்படுகின்றது.

இருந்த போதும், அவர் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்காக பெற்றுக்கொண்ட விசாவின் உண்மையான நோக்கம் அதுவல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆகவே, Rahaf Mohammed al Qunun-ஐ சுற்றுலா விசாவின் மூலம் நாட்டுக்குள் அனுமதிக்கமுடியாது என்று குடிவரவு அமைச்சு வட்டாரங்கள் முன்னர் கூறியிருந்தன.

Rahaf Mohammed al Qunun-க்கு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கொடுக்கவேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

கிறீன்ஸ் செனட்டர் Sarah Hanson-Young உடனடியாகவே இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, Rahaf Mohammed al Qunun தற்போது தாய்லாந்திலுள்ள UNHCR அமைப்பிடம் அவரது அகதி விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.

UNHCR அந்த விண்ணப்பம் தொடர்பான முடிவெடுப்பதற்கு ஐந்து நாட்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதில் வெளிவருகின்ற முடிவின் பிரகாரம் அவுஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களம் அவரது தஞ்சக்கோரிக்கையை பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Rahaf Mohammed al Qunun அவர்களின் சகோதரனும் தந்தையும் தாய்லாந்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்து இறங்கியுள்ளார்.

ஆனால் Rahaf Mohammed al Qunun-ஐ சந்திக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.