உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்! 344 குடும்பங்கள் பாதிப்பு

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இன்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவர்களில், 156 குடும்பங்களில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் 188 குடும்பங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும், அமைச்சரவையில் சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.