உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் திறக்கப்பட்ட ஷங்ரி லா ஹோட்டல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து மூடப்பட்டிருந்த கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டல் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நாளை மாலை 6 மணி தொடக்கம் ஹோட்டல் பாவனையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொழும்பு கிங்ஸ்பரி, சினமன் கிரான்ட் மற்றும் ஷங்ரி-லா ஆகிய 3 நட்சத்திர ஹோட்டல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் குறித்த ஹோட்டல்கள் புனரமைப்புச் செய்யப்பட்டன. அதற்கமைய கிங்ஸ்பரி மற்றும் சினமன் ஹோட்டல்கள் ஏற்கனவே வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், ஷங்ரி-லா ஹோட்டலின் புனரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் தமது ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தோருக்கும் நிவாரணத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.