உருளைக்கிழங்கு மசால் தோசை

சுவையான உருளைக்கிழங்கு மசால் தோசை தயார் செய்வது எப்படி என்று வாங்க தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

தோசை மாவு – 2 கப்

மசாலாவிற்கு

உருளைக்கிழங்கு – 250 கிராம்,
வெங்காயம் – 2,
ப.மிளகாய் – 4,
இஞ்சி – ஒரு துண்டு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி தழை – சிறிதளவு,
உப்பு – சுவைக்கு

தாளிக்க…

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – தேவையான அளவு.

செய்முறை :

வெங்காய், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வதங்கி வரும் போது அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி கிளறி இறக்கவும். மசால் ரெடி.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும்.

சுற்றி சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுத்து பரிமாறுங்கள்.

இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு மசால் தோசை ரெடி.